2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கடலாமையை வீட்டில் வளர்த்த இளைஞன் கைது

Kogilavani   / 2015 ஜூன் 30 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.புங்குடுதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் வீட்டிலுள்ள தொட்டிக்குள் வைத்து 2 கடலாமைகளை வளர்த்து வந்த 21 வயதுடைய இளைஞனை செவ்வாய்க்கிழமை (30) கைதுசெய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

கடலாமைகளை கடலிலிருந்து பிடித்துக்கொண்டு வந்த இந்த இளைஞன் வீட்டில் உள்ள தொட்டியில் வைத்து வளர்த்துள்ளானென விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பில் தகவலறிந்த பொலிஸார் வீட்டுக்குச் சென்று கடலாமைகளை மீட்டதுடன் இளைஞனையும் கைதுசெய்தனர்.

கடலாமையை வளர்த்து இறைச்சியாக்கும் நோக்குடன் அதனை வளர்த்ததாக இளைஞன் விசாரணைகளின்போது கூறியுள்ளான்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .