2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மானிப்பாய் இந்துக் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா

Sudharshini   / 2015 ஜூலை 01 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

மானிப்பாய் இந்துக் கல்லூரியின்  தொழில்நுட்ப பீடம் மற்றும் ஆய்வு கூடம் ஆகியவற்றின் திறப்பு விழா நிகழ்வு கல்லூரியின் முதல்வர் எஸ்.சிவநேஸ்வரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (29) கல்லூரியின் மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்லூரியின் பழைய மாணவனான சிறிரஞ்சனினால் தனது தாயரின் நினைவாக அமைக்கப்பட்ட நடராஜா பரமேஸ்வரி மாணவர் விடுதி, அதிபர் அலுவலகம் ஆகியனவும் இதன்போது திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பிரதம விருந்தினராகவும் வடமாகாண விவசாய கால்நடைகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கௌரவ விருந்தினராகவும் ஓய்வுநிலை வலிகாமம் வலய கல்விப்பணிப்பாளர் திருமதி ரெஜினி இருதயநாதன், முன்னாள் பழைய மாணவர்சங்க தலைவர் என்.விவேகானந்தராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .