Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூலை 04 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
வலி. வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கீரிமலை நகுலேஸ்வரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள சுமார் 35 ஏக்கர் காணி மக்களின் மீள்குடியேற்றத்துக்கு சனிக்கிழமை (04) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வலி. வடக்கு பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன் மற்;றும் வலி. வடக்கு பிரதேச சபையின் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கீரிமலை மாவிட்டபுரம் வீதியில் அமைந்துள்ள குறிப்பிட்ட காணிகள் கடற்படையினர் வசம் இருந்து வந்தது.
சனிக்கிழமை (04) காலை கடற்படையினரால் குறிப்பிட்ட பிரதேசத்தில் மக்கள் மீளக் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளதாக வலி. வடக்கு பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபையின் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து உடனடியாக குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற பிரதேச செயலாளரும் பிரதேச சபைத் தலைவரும் மக்கள் மீள்குடியேற்றத்துக்கான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பிட்ட காணிகளை விடுவிக்கக்கோரி பொது மக்களினால் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடற்படையினருக்கு எதிராக கடந்தாண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
35 minute ago
1 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
4 hours ago
6 hours ago