Menaka Mookandi / 2015 ஜூலை 07 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து புதிதாக மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலும் வாக்குச் சாவடிகளை அமைப்பது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பிரதி தேர்தல்கள் ஆணையாளருமான நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலும் வாக்குச் சாவடிகளை அமைக்குமாறு பொதுமக்கள் கோரியுள்ளனர். அது சம்பந்தமாக உரிய அதிகாரிகளுடன் பரிசீலித்து வருகின்றோம்' என்றார்.
'கடந்த காலத்தில் இடம்பெற்ற தேர்தல்களின் போது பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்துச் சென்ற மக்களின் நன்மை கருதி, அவர்கள் வாழும் நலன்புரி நிலையங்களுக்கு அருகில் விசேட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
இம்முறையும்; கடந்த காலங்களைப் போன்று விசேட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதுடன் அண்மையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலும் அவ்வாறான வாக்குச்சாவடிகளை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்' என அவர் மேலும் கூறினார்.
25 minute ago
52 minute ago
58 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
52 minute ago
58 minute ago
59 minute ago