Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 07 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
சுன்னாகம், மயிலனி பகுதியில் அபாயகரமான ஆயுதங்கள் மற்றும் பெற்றோல் குண்டுகளுடன் கைதான சந்தேகநபர்கள் 11பேருக்கும் பிணை வழங்குவதற்கு மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், திங்கட்கிழமை (06) மறுப்பு தெரிவித்துள்ளார்.
மன்றில் ஆஜரான சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.வீ.எல்.துஸ்மந்த, சந்தேகநபர்களை விடுவிப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். இவர்களை விடுவித்தால் மீண்டும் குழு மோதலில் ஈடுபடுவார்கள் என தெரிவித்து பிணை வழங்க வேண்டாம் என நீதவானிடம் கோரினார்.
அவரது வாதத்தை கருத்திற்கொண்ட நீதவான், சமாதானத்துக்கு இடையூறு விளைவித்தமை, கலகத்தில் ஈடுபட முயன்றமை, மற்றும் அபாயகரமான ஆயுதங்கள், வெடிகுண்டுகள் வைத்திருந்தமை போன்ற குற்றங்களுக்கு பிணை வழங்க முடியாது என்று கூறினார்.
மேற்படி குற்றங்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் மேல்நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளதால், மேல் நீதிமன்றில் பிணை கோரி விண்ணப்பிக்குமாறும் குறிப்பிட்டதுடன் சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிக்க உத்தரவிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் சுன்னாகம் மயிலினி பகுதியில், குழு மோதலுக்கு அளவெட்டி, மற்றும் மல்லாகம் பகுதிகளிலிருந்து வந்திருந்த 11 பேரை கைது செய்த சுன்னாகம் பொலிஸார், சந்தேக நபர்களிடம் இருந்து 04 வாள், 02 பெற்றோல் குண்டுகள், 03 கொட்டன்கள், மற்றும் கோடரி என்பவற்றை பறிமுதல் செய்திருந்தனர்.
35 minute ago
1 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
4 hours ago
6 hours ago