Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூலை 10 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் முக்கிய கட்சிகள் பல இன்று வெள்ளிக்கிழமை (10) வேட்மனுத் தாக்கல் செய்யவுள்ளதால் யாழ். மாவட்டச் செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப் படையினரின் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கலகம் அடக்கும் வாகனங்கள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைபோலவே, யாழ். நகரப் பகுதியிலும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .