Thipaan / 2015 ஜூலை 11 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
அளவெட்டி அருணோதயாக் கல்லூரியின் நிறுவுநர் நினைவு தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கல்லூரி அதிபர் நாகலிங்கம் கேதீஸ்வரன் தலைமையில் கதிர்காமசேகரம் திறந்தவெளி அரங்கில் வியாழக்கிழமை (09) நடைபெற்றது.
நினைவுப் பேருரையை மானிப்பாய் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் ச.சிவனேஸ்வரன் நிகழ்த்தினார்.
விருந்தினர்களின் உரைகளைத் தொடர்ந்து, போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பணப் பரிசில்களும் மற்றும் பதங்கங்களும் வழங்கப்பட்டன.
பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன், சிறப்பு விருந்தினராக தெல்லிப்பழை கல்விக்கோட்ட கல்விப் பணிப்பாளர் அ.ஈஸ்வரநாதன், கௌரவ விருந்தினராக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தலைவர் சோ.சுகிர்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago