2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் தேர்தல் வன்முறைகள் இல்லை

Menaka Mookandi   / 2015 ஜூலை 23 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா, சுப்பிரமணியம் பாஸ்கரன்

கடந்த முறை இடம்பெற்ற தேர்தல்களுடன் ஒப்பிடுமிடத்து, இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலையிட்டு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகவில்லை என்று அம்மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் இதுவரையில் தேர்தல் வன்முறைகள் என பாரியளவில் எதுவும் இடம்பெறவில்லை என்பதை பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், 5 சிறிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் அவை தொடர்பில் உடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக எதுவித முறைப்பாடுகளும்; பதிவாகவில்லை என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 79 ஆயிரத்து 93 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க கூடியவகையில் 96 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. ஏழு வாக்கெண்ணும் நிலையங்களும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

அத்துடன், கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலும் தேர்தல் முறைப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டு அதற்கான உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .