2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.கவின் அலுவலகம் மீது இனம் தெரியாதோர் தாக்குதல்

Thipaan   / 2015 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் வைத்திய கலாநிதி இ.சிவசங்கரின் அலுவலகம், ஞாயிற்றுக்கிழமை (02) இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (02) அதிகாலை 2.30 மணியளவில் சிவசங்கரின் அலுவலகம் மீது தாக்குதல் நடாத்தியவர்கள், அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த வேட்பாளரின் பெயர்ப் பலகையின் ஒரு பகுதியை எரித்துள்ளனர்.

அத்துடன், வேலியை சேதப்படுத்தி, அலுவலகத்தில் இருந்த மின்குமிழ்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

2.30 மணியளவில் வான் மற்றும் இரு மோட்டார் சைக கிள்கள் வீதியோரம் நின்றுகொண்டிருந்ததாகவும் இதன்போது அலுவலகத்தில் உடைக்கும் சத்தமும் கேட்டதாகவும் அங்கிருந்த அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அருகிலிருக்கும் சீ.சீ.டி.வி கமராப் பதிவுகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .