2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பிரபாகரனின் அரசியல் மேடையில் ஜ.போ.க.வின் விஞ்ஞாபனம் வெளியீடு

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தனது அரசியல் பிரவேசம் தொடர்பில் அறிவித்த யாழ்ப்பாணம், சுதுமலை அம்மன் கோயில் வளாக மேடையில் வைத்து, ஜனநாயக போராளிகள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் சற்று முன்னர் வெளியிடப்பட்டது.

புதுடில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பிய வேலுப்பிள்ளை பிரபாகரன், 1987ஆம் ஆண்டு இதே ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதியே மேற்கண்ட அறிவிப்பை விடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே, ஜனநாயக போராளிகள் கட்சியும், தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை மேற்கண்ட வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் வைத்தே வெளியிட்டதாக அக்கட்சியின் இணைப்பாளரும் முதன்மை வேட்பாளருமான என்.வித்தியாதரன், தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .