Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கி.பகவான்
காணாமற்போன சிறுமி, இளைஞர் ஒருவருடன் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதை அறிந்த அச்சிறுமியின் தந்தை தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம், தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், திங்கட்கிழமை (03) உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலம் தெரியவருவதாவது,
கொடிகாமத்தைச் சேந்த 14 வயது சிறுமியொருவர் காணாமற் போனார் என அவரின் பெற்றோரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனும் காணாமல் போயிருந்தார்.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த இளைஞனும் சிறுமியும் குடும்பமாக வாழ்வதைக் கண்டறிந்து, அவர்களைக் கைது செய்தனர். தனது மகள் இவ்வாறு நடந்து கொண்டார் என்பதை அறிந்த சிறுமியின் தந்தை தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், குடும்பத்தாரால் காப்பாற்றப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞரையும் சிறுமியையும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் திங்கட்கிழமை பொலிஸார் ஆஜர்படுத்தினர். இதன்போது, இளைஞனை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், சிறுமியை கைதடியிலுள்ள சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
அத்துடன், இளைஞனையும் சிறுமியையும் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி எதிர்வரும் 14ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிவான் கட்டளையிட்டார்.
16 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago
1 hours ago