2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சுன்னாகம் வீடுகளில் திருட்டு

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

சுன்னாகம், கந்தரோடை பகுதியில் இன்று செவ்வாய்கிழமை (04) அதிகாலை இரு வீடுகளுக்குள் புகுந்த திருடர்களால் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் இரண்டரை இலட்சம் ரூபாய் வரையான பணம் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தரோடை சுப்பிரமணியம் வீதியில் உள்ள வீட்டினுள் முகத்தை துணியால் கட்டிய நால்வர் வீட்டுக்கூரை வழியாக உள்நுழைந்து அங்கிருந்தவர்களை மிரட்டி சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு பணமான ஆயிரம் பவுன்ஸ் என்பவற்றை திருடி சென்றுள்ளார்கள்.

இவ்வீட்டிலிருந்து சற்று தள்ளி உள்ள ஒரு வீட்டினுள் நுழைந்த குறித்த திருடர்கள் அங்கிருந்தவர்களையும் மிரட்டி சுமார் 35,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார்கள். குறித்த சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .