2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

ஐ.தே.க வேட்பாளர் மீது தாக்குதல் குற்றச்சாட்டு

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் சின்னராஜா விஜயராஜன், கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக வைத்து முச்சக்கரவண்டி உரிமையாளர் ஒருவரை இன்று வியாழக்கிழமை (13) தாக்கியதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி வைத்தியசாலை அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை நடத்துவதற்காகச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் முச்சக்கரவண்டியில் உரிமையாளர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

இதனையடுத்து, அங்கு சென்ற மேற்படி வேட்பாளர் தங்களில் ஒருவரை தாக்கியதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

தங்களைத் தாக்கிய வேட்பாளரை பொலிஸார் பாதுகாப்பாக கொண்டு சென்று வாகனத்தில் தப்பிச் செல்லச் செய்தாக எமது ஊடகவியலாளரிடம் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X