2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

247 கிராமங்களுக்கான நிதி கிடைத்துள்ளது: சுந்தரம் அருமைநாயகம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 20 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.றொசாந்த்


ஒரு கிராமத்தில் ஒருமில்லியன் ரூபாய் என்ற அபிவிருத்தி திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்திலுள்ள 247 கிராமங்களுக்கான நிதி தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், திங்கட்கிழமை (20) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்ததிட்டத்துக்கான நிதி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் வழங்கப்படுகின்றது. மேற்படி திட்டத்திற்காக யாழ்.மாவட்டத்தில் 435 கிராமங்கள் தெரிவுசெய்யப்பட்டன.

தேவைகள் அதிகமுள்ளகிராமங்கள் அந்தந்தபிரதேசசெயலகங்கள் ஊடாகதெரிவுசெய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து,அவை தொடர்பிலான விவரங்கள் அனுப்பிவைக்கப்பட்டு, முதற்கட்டமாக 247 கிராமங்களுக்கான நிதி  தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்நிதி உரிய பிரதேசசெயலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மிகுதி கிராமங்களுக்கான நிதிகிடைக்கப்பெறும்' எனஅவர் மேலும் தெரிவித்தார்.
 
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .