Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம். றொசாந்த் / 2019 ஜனவரி 25 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்காக 249 பட்டதாரிகளுக்கு நாளைய நாளை (26) ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கு 440 வெற்றிடங்களை நிரப்பும் வகையில் கடந்த ஆண்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
இதற்காக 360 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைத்த நிலையில் போட்டிப் பரீட்சை இன்றி நேரடியாக நேர்முகப்பரீட்சை இடம்பெற்றது.
இதில் தகுதியாக கணித , விஞ்ஞான பாடங்களிற்கை 160 பட்டதாரிகளும் ஏனைய பாடங்களில் 89 பேருமாக மொத்தம் 249 பேர் தெரிவாகியுள்ளனர்.
இவ்வாறு தெரிவானவர்களில் இந்த மாத ஆரம்பத்தில் நியமனம் வழங்க முயற்சிக்கப்பட்டது. இருப்பினும் வரவு செலவுத் திட்ட நிறைவேற்றம் தொடர்பில் காலதாமதம் ஏற்பட்டது.
இருப்பினும் குறித்த நியமனத்திற்கான அனுமதி கடந்த ஆண்டே பெறப்பட்ட வகையில் பிரதம செயலாளர் ஊடாக திறைசேரிக்கு விண்ணப்பித்து விசேட அனுமதியின் பெயரில் குறித்த நியமனம் நாளை வழங்கப்படுகின்றது என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
38 minute ago
2 hours ago