2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

31 கிலோ கஞ்சா மீட்பு

Editorial   / 2018 டிசெம்பர் 31 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

வாகனம் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட 31 கிலோ கிராம் கஞ்சாவை மீட்டதுடன், சந்தேகநபர் ஒருவரையும் சிறப்பு அதிரடிப்படையினர் இன்று (31) அதிகாலை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் வாகனம் ஒன்றில் போதைப் பொருள் கடத்தல் இடம்பெறுவதாக சிறப்பு அதிரடிப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சந்தேகத்துக்கு இடமாக இன்று (31) அதிகாலை 2 மணிக்கு பயணித்த வாகனம் ஒன்றை மறித்துச் சோதனையிட்டனர்.

வாகனத்தில் சுமார் 31 கிலோ கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

அதிரடிப் படையினர் கஞ்சாவைக் கைப்பற்றியதுடன், வானில் பயணித்த நபரையும் கைது செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .