Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
நுண்கடனால் பாதிக்கப்பட்ட பயனாளிகளின் பெயர் விவரங்களை, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் திறைசேரிக்கு அனுப்பி வைக்குமாறு, அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நுண்கடன் சுமைகளில் இருந்து விடுபடுவதற்கு, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற ஏற்பாடுகள் பற்றிப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள், மகளிர் சிவில் வலையமைப்புகளால், முல்லைத்தீவில் இன்று (16) விநியோகிக்கப்பட்டன. அந்தத் துண்டுப் பிரசுரங்களிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுண்கடன் தாக்கங்களில் இருந்து மக்களை விடுவிக்கக் கோரி, வடக்கு - கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த கவனயீர்ப்புப் போராட்டங்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநருடனான கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் பிரதிபலனால், நுண்கடன் சுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, சில சலுகைகளை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.
இந்தச் சலுகைகள் தொடர்பான விவரங்களை மக்களிக்கு அறிவிக்கும் நோக்கிலேயே, இவ்வாறு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
அவ்வாறு அரசாங்கத்தால் வழங்கப்பட்டவுள்ள சலுகைகள் வருமாறு,
1. நுண்கடன் சலுகைகளால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டகளிலுமுள்ள 75,000 பெண்களின் நுண்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமென்று, நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2. 100,000 ரூபாய் அல்லது அதற்குக் குறைவாக நுண்கடன்களைப் பெற்று (நுகர்வுத் தேவைக்காகப் பெற்ற கடன் அல்ல), 2018ஆம் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்குள் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்குக் கட்டுப்பணத்தை மீளச்செலுத்த முடியாமற்போன பெண்களில் கடன்களே, இவ்வாறு தள்ளுபடி செய்யப்படும்.
3 ஒரு நபர், 100,000 ரூபாய் அல்லது அதற்குக் குறைவான தொகையை நுண்கடனாகப் பெற்றிருப்பின், அவற்றுள் மிகக் கூடுதலான பெறுமதியுள்ள கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.
மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குள் அடங்கும் நுண்கடன் பயனாளிகளின் பெயர் விவரங்களை, அந்தந்த நுண்கடன் நிறுவனங்களிடம் இருந்து, நிதி அமைச்சு கோரியுள்ளது.
இவ்வாறு பெற்றப்பட்ட பெயர் விவரங்கள் அடங்கிய பட்டியலை, இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர், அனைத்து நிதி நிறுவனங்களும் திறைசேரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், நுண்கடனால் பாதிக்கப்பட்டப் பெண்கள், கடன் பெற்ற நிறுவனக் கிளை அலுவலகங்களுக்குச் சென்று, உங்கள் பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு, கரைதுரைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்புப் பிரதேச மட்ட பெண்கள் சிவில் வலையமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago