2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

4 அடையாள அட்டைகளுடன் நடமாடியவருக்கு மறியல்

Editorial   / 2019 ஏப்ரல் 24 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

யாழ்ப்பாணம் நகரில் நான்கு அடையாள அட்டைகளுடன் நடமடியவர் உட்பட இருவரை, எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் அந்தோனிப்பிள்ளை பீற்றர் போல், நேற்று (23) உத்தரவிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சோதனை நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில், யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு அருகில், 4 அடையாள அட்டைகளுடன் நடமாடியக் குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில், நேற்று (23) ஆஜர்படுத்திய போது, அவரை 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணம் நகரில், திங்கட்கிழமை (22) அழைபேசி திருத்தும் கடையொன்றுக்குச் சென்ற அநுராதபுரத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவர், அங்கு பணியாற்றுபவர்களுடன் முரண்பட்டுள்ளார்.

இதையடுத்து, இது இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த இராணுவப் புலனாய்வாளர்கள், குறித்த நபரை கைதுசெய்தனர்.

சந்தேகநபர் போன் சொப்புக்குச் செல்ல முன்னர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று தேனீர் அருந்திவிட்டு வெளியேறியுள்ளார். அத்துடன், அநுராதபுரத்தில் வசிக்கும் தான்

விசாரணைகளின் போது, குறித்த நபர், நயினாதீவு நாக விகாரைக்கு வழிபட வந்ததாக வாக்குமூலமளித்துள்ளார்.

அத்துடன், சந்தேகநபருக்கு எதிராக வேறு நீதிமன்றிலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவரை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்திய போது, அவரை 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .