2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

5,000 ரூபாய் தாள்களை மிதித்தவருக்கு பிணை

Janu   / 2024 ஜூலை 10 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் புழக்கத்தில் உள்ள ஐந்தாயிரம் ரூபாய் தாள்களை காலில் போட்டு மிதித்த சம்பவம் தொடர்பில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரனுக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தியாகி அறக்கொடை நிறுவன தலைவரின் மகளின்  பிறந்த தினத்தினை முன்னிட்டு, கடந்த ஜூன் மாதம் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள தனது அறக்கட்டளை அலுவலகத்தின் முன்பாக வைத்து  வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்கிய போது , ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் , "இன்றைக்கு நிவாரணம் பெறுவதற்கு தான் எதிர்பார்த்த மக்கள் வரவில்லை " என கூறி , தனது சட்டை பையில் இருந்த பெருமளவான ஐந்து ஆயிரம் ரூபாய் தாள்களை எடுத்து நிலத்தில் போட்டு காலால் மிதித்த படி நின்று கருத்து தெரிவித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து பெருமளவானோர் அதற்கு கடும் எதிர்ப்புக்களை தெரிவிப்பதுடன் கண்டனங்களையும் பதிவு செய்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் தியாகேந்திரனிடம் வாக்குமூலத்தினை பெற்று , யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  .

குறித்த வழக்கு விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை (09) அன்று , தியாகேந்திரன் நீதிமன்றில் முன்னிலையான போது, ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் அவரை விடுவிக்க மன்று உத்தரவிட்டது .

எம்.றொசாந்த் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X