2025 மே 20, செவ்வாய்க்கிழமை

55 வது பேராளர் மகாநாட்டில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும்: ஆசி

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                              (ரஜனி)
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 55 ஆவது பேராளர் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள ஆசிரியர்களுக்கு ஒரு நாள் விசேட விடுமுறையை பாடசாலைகள் வழங்க வேண்டுமென ஆசிரியர் சங்க செலயாளர் லெஸ்லி கோரிக்கை விடுத்துள்ளார்.

செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி வவுனியா முத்தையா மண்டபத்தில் நடைபெறவுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 55 ஆவது பேராளர் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை முழுதும் உள்ள ஆசிரியர்களுக்கு தாபன நிதிக் கோவை 21 ஆம் அத்தியாயம் 2 ஆம் பிரிவின் கீழ் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டியதுடன், புகைவண்டி ஆசனச் சீட்டும் வழங்கப்படுவது அவர்களின் உரிமையாகும்.

எனவே, அன்றைய தினம் பேராளர் மகா நாட்டில் கலந்து கொள்ளவுள்ள ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் பாடசாலை அதிபர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன், 55ஆவது பேராளர் மாநாட்டில் புதிய நிர்வாக தெரிவும் இடம்பெறுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் உள்ள மும்மொழிகளிலும் தொழிற்சங்கத்தின் ஊடாக 2 லட்சத்தி 15 ஆயிரம் ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X