2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

58 இந்திய மீனவர்களும் விடுதலை

Kogilavani   / 2014 மார்ச் 29 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 58 இந்திய மீனவர்களையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தரவிற்கமைய ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் வெள்ளிக்கிழமை (28) விடுதலை செய்தார்.

மீனவர்களுடன் அவர்கள் வருகை தந்த 14 படகுகளும் அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், இவர்களைப் பொறுப்பேற்றுக் கொண்ட யாழ்.இந்தியத் துணைத்தூதரகம், இலங்கை கடற்படையினர் ஊடாக இந்திய கடற்படையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளது.

காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடந்த 19 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 13 படகுகளில் வந்திருந்த 53 மீனவர்களும், கச்சதீவிற்கு அண்மையில் வியாழக்கிழமை (27) கைதுசெய்யப்பட்ட இயந்திரக்கோளாறான ஒரு படகில் வந்த 5 மீனவர்களுமே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .