2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

8,934 முதியோர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன: இமெல்டா

George   / 2014 டிசெம்பர் 14 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

சமூக சேவைகள் அமைச்சால் இந்த வருடத்தில் 8,934 முதியோர்களுக்கான, முதியோர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் இமெல்டா சுகுமார் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுவதாவது,

சமூக சேவைகள் திணைக்களம் மூலம் 60 வயதைக் கடந்த முதியோர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி வரும் முறை, 2008 ஆம் ஆண்டு முதல் மாற்றம் செய்யப்பட்டு, சமூக சேவைகள் அமைச்சால் நேரடியாக வழங்கும் முறை ஏற்படுத்தப்பட்டது.

2008ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 2 இலட்சத்து 161 முதியோர் அடையாள அட்டைகள் அமைச்சால் வழங்கப்பட்டுள்ளன.

பிரதேச செயலகங்களிலுள்ள முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உதவியாளர் அல்லது சமூக சேவைகள் அலுவலர் ஊடாக விண்ணப்பித்து, பிரதேச செயலாளர்களின் கையொப்பத்துடன் ஒரிரு மணித்தியாலங்களில் முதியோர் அடையாள அட்டை பெறக்கூடிய நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனைவிட காலத்துக்கு காலம் அமைச்சின் நடமாடும் சேவை, அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலமான நடமாடும் சேவைகள் மூலமாகவும் முதியோர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முதியோர் அடையாள அட்டையை வைத்திருக்கும் ஒருவர், வைத்தியசாலைகள், நீதி சேவைகள், வங்கி சேவைகள், போக்குவரத்து சேவைகள், அரச அலுவலகங்கள் போன்றவற்றில் முன்னுரிமையை பெற்றுக்கொள்ள முடியும் என இமெல்டா அனுப்பிய செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .