Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா
சுகாதார தொண்டர்களுக்கான நியமனம் வடமாகாண சபையின் தீர்மானத்துக்கு அமைவாக, 957 பேருக்கு வழங்க வேண்டுமெனத் தெரிவித்த , வடமாகாண சபை முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஆளணி தேவைப்பட்டால், முறைப்படியான கோரல்களின் மூலம் நியமனங்கள் வழங்க வேண்டுமெனவும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடம், கோரிக்கை விடுத்தார்.
வடமாகாண சபையில், இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், வடமாகாண சபையினால், ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, 820 சுகாதார தொண்டர்களுக்கு நியமனம் வழங்க வேண்டுமென, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டதாகவும் அதன்பின்னர், வைத்தியசாலைகளில், பிரேத பரிசோதனை நிலையங்களில் கடமையாற்ற ஆண் தொழிலாளர்கள் தேவை என்பதன் அடிப்படையில் 137 உள்வாங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த 957 பேருக்கும் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த அவர், அதற்கு மேலே ஏதாவது நியமனங்கள் இருந்தால், அவை முறைப்படியாக கோர வேண்டுமெனவும் கூறினார்.
அவ்வாறு நியமனங்கள் கோர வேண்டுமாயின், இந்த 957 பேருக்கும் நியமனங்கள் வழங்கிய பின்னர், அவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்த விரும்புகின்றோம்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையின் 38 உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்தை நிறைவேற்ற தயங்குவது, கவலைக்குரிய விடயமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025