Menaka Mookandi / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ், மாதகல் கடற்பகுதிக்குள் இன்று திங்கட்கிழமை அதிகாலை இந்திய அதிவேக மீன்பிடிப்படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதினால் மாதகல் மீனவர்களுக்கு சொந்தமான சுமார் 21 இலட்சம் பெறுமதியான கடல் உபகரணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய நீரியல் வளத்துறை பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறி வடகடலுக்குள் நுழைவார்களானால் அவர்கள் வடகடல் மீனவர்களினால் சிறைப்பிடிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்.நீரியல் வளத்துறைத் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார்
வடகடல் பகுதிக்குள் இந்திய மீனவர்கள் அதிகளவில் வந்து யாழ்.மீனவர்களின் வலை, கயிறுகளை வெட்டி அளித்துச் செல்வதினால் அத்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றுமுழுதாக முடங்குவதாகவும் எதிர்வரும் காலங்களின் இந்திய மினவர்கள் அத்துமீறி உள்நுழைவார்களானால் அவர்கள் கடலில் வைத்து சிறைப்பிடிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago