2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

காரியாலயத்திலும் இனி சுகமாக தூங்கலாம்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வேலை செய்கின்ற இடங்களில் தூங்குவதென்பது சாத்தியமில்லாத விடயம்தான். இருப்பினும் தமக்குக் கிடைக்கின்ற சிறிய இடைவேளையிலும் குட்டித் தூக்கம் போடுகின்ற பலரை நாம் பார்த்திருக்கிறோம். இப்படி குட்டித் தூக்கம் போடுகின்ற பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியொன்றை பிரித்தானிய கழுத்துப்பட்டி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று தந்திருக்கிறது.

சாதாரண கழுத்துப்பட்டி (டை) போன்றே இந்த கழுத்துப் பட்டிகளும் காணப்படுகின்றன. சுமார் 60 வகையான பட்டிகளை தயாரித்திருக்கிறார்கள். இதில் விசேடம் என்னவென்றால் இந்த கழுத்துப்பட்டிகளை நீங்கள் விரும்பிய நேரத்தில் தலையணையாகவும் பயன்படுத்த முடியும் என்பதுதான். கழுத்துப் பட்டியின் முனைப் பகுதியில் சிறிய காற்றுப் பை ஒன்று உள்வாங்கப்பட்டிருக்கிறது. கழுத்துப்பட்டியில் கூரான பகுதியில் சிறிய துவாரம் இருக்கிறது. இதில் நீங்கள் வாயினை வைத்து காற்றை நிரப்பமுடியும். காற்று நிரப்பியதும் சிறிய தலையணைபோல் அது மாறிவிடுகிறது.
காற்று நிரப்பப்பட்ட கழுத்துப்பட்டியினை தலையணையாக பயன்படுத்தி உங்கள் முதலாளி கண்ணில் படாமல் குட்டித் தூக்கம் போடலாம். திடீரென முதலாளி வந்துவிட்டால் காற்றினை திறந்துவிட்டதும் சாதாரண கழுத்துப்பட்டிபோல் அது மாறிவிடும். ஆகையினால் தொடர்ச்சியாக வேலைசெய்யும் உங்களுக்கு சிறிய ஓய்வெடுக்க இந்த கழுத்துப்பட்டிகள் உதவும் என்பதில் சந்தேகமில்லை.

சுமார் 2500 ரூபாய் பெறுமதியான இந்த கழுத்தப் பட்டிகள் அடுத்த மாதமளவில் பிரித்தானியாவில் சந்தைக்கு வரவிருக்கின்றன.


  Comments - 0

  • riyas Tuesday, 22 February 2011 09:12 PM

    உலகம் போற போக்கை பரு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .