2021 ஜூன் 24, வியாழக்கிழமை

பாலியல் தொந்தரவு கொடுத்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பிணை

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வந்து கற்பிட்டி இலந்தையடிப் பிரதேச ஹோட்டலொன்றில் தங்கியிருந்த இரு பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட அதே ஹோட்டலில் பணிபுரிந்து வந்த தனியார் நிறுவன பாதுகாப்பு உத்தியோகத்தரை, 3 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு, புத்தளம் மாவட்ட பதில் நீதவான் எம்.எம்.இக்பால் உத்தரவிட்டுள்ளார்.

லண்டன் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்குச் சுற்றுலா வந்த இரு பெண்களும், குறித்த ஹோட்டலில் தங்கியிருந்த போது, நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் அவர்களின் அறைக்குள் வந்த நபரொருவர், அப் பெண்களின் கால்களைத் தடவியதுடன், பாலியல் தொந்தரவுகளையும் வழங்குவதை உணர்ந்துகொண்ட குறித்த பெண்கள், உடனடியாக விழிப்படைந்து, உதவியாளரை அழைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அதிகாலை 1.45க்கு கற்பிட்டிப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியமையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கற்பிட்டிப் பொலிஸார், ஆனமடுவப் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரை, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .