2021 ஜூன் 19, சனிக்கிழமை

புத்தளம் குருநாகல் பாதைகள் புனரமைப்பு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)
 
புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலுள்ள 168 பாதைகள் புனரமைப்பதற்காக 400 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி மின்சாரம் வீடமைப்பு நிர்மாண கடற் தொழில் அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.
 
இத்திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் 65 வீதிகளுக்காக 160 மில்லியன் ரூபாவும் குருநாகல் மாவட்டத்தில் 103 வீதிகளுக்காக 240 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்ப்படுள்ளன.

பாதைகளின் புனரமைப்பு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்பு வீதிகள் யாவும் புனரமைப்பு செய்யப்பட்டுவிடுமென்று வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .