2021 டிசெம்பர் 01, புதன்கிழமை

வறிய குடும்பங்களுக்கான உதவிகள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 26 , மு.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

வறிய குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தெரிவுசெய்யப்பட்ட 05 குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்களும் இருவருக்கு வள்ளம் வாங்குவதற்கு பகுதியளவிலான கொடுப்பனவுகளும் புத்தளம் மொஹிடீன் ஜூம்மா பள்ளிவாசலில் இயங்கும் பைத்துஸ் ஸக்காத் நிதியத்தினால் வழங்கி வைக்கப்பட்டன.  

புத்தளம் மொஹிடீன் ஜூம்மா பள்ளிவாசலில் நேற்று  வெள்ளிக்கிழமை இவர்களுக்கான தையல் இயந்திரங்களும் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டன.

இதில் நிதியத்தலைவர் முஸம்மில், புத்தளம் பிரதேச செயலாளர் நபீல், புத்தளம் ஜம்மியத்துல் உலமா சபைத்தலைவர் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் உட்பட பல உலமாக்களும் பள்ளி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X