2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

'க.பொ.த உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் ஏ தர சித்தி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி விருது விரைவ

Super User   / 2011 மார்ச் 26 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரஸீன் ரஸ்மின்)

அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப்பரீட்சையில் மூன்று பாடங்களிலும் ஏ தர சித்தி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்டவுள்ளதாக மூன்று மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டதாகவும் ஆனால் இது வரையிலும் அந்த விருது வழங்கப்படவில்லையெனவும் உயர்தரப்பரீட்சையில் மூன்று பாடங்களிலும் ஏ தரச் சித்தி பெற்ற புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு ஜனாதிபதி விருது வழங்கப்படவிருப்பதாகவும் அதற்கான தரவுகள் கல்வி அமைச்சினால் சேகரிக்கப்பட்டதாகவும் கூறும் மாணவர்கள் ஏனைய மாவட்டங்களில் உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் ஏ தரச்சித்தி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்ட போதிலும் தமக்கு குறித்த விருத வழங்கப்படவில்லையெனவும் மாணர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த மாணவர்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரியொருவருடன் தொடர்பு கொண்டு இது தொடர்பாக கேட்ட போது, உண்மையில் உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் ஏ தரச்சித்தி பெற்ற அகில இலங்கை ரீதியிலான 4000 மாணவர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

பின்னர்  அதற்காக திகதியும் அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் அவை கால வரையறையின்றி பிற்போடப்பட்டுவிட்டது. அந்த விருது புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாத்திரமின்றி எந்த மாவட்டத்திற்கும் அவை வழங்கப்படவில்லை. எனவே அவை தொடர்பில் விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .