2021 டிசெம்பர் 01, புதன்கிழமை

மஹவிலச்சிய நெலும்வில பில்லாவ பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீர்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 29 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

மஹவிலச்சிய நெலும்வில பில்லாவ பிரதேசத்தில் சிறுநீரக நோயால் அதிகளவான மக்கள் பாதிக்கப்படுவதால் அதனை நிவர்த்தி செய்யும் முகமாக  அப்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கையை வடமத்திய மாகாண நீர்வழங்கல்; திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

மஹவலிச்சிய மல்லேவ பகுதியில் சுத்தமான குடிநீர்; இல்லாமையாலேயே அதிகளவான மக்கள்  சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண நீர்வழங்கல் திணைக்கள அதிகாரி எல.;எல்.ஏ.பீரிஸ் தெரிவித்தார்.

இந்த நிலையில், அப்பிரதேசத்திலுள்ள நீர்த்தாங்கிகளுக்கு துருவிலவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தருவிக்கப்பட்டு  பவுஸர் மூலம் வழங்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X