2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

கற்பிட்டி பிரதேசசபைக்குட்பட்ட வீதியை புனரமைக்க கோரிக்கை

Suganthini Ratnam   / 2011 மார்ச் 31 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரஸீன் ரஸ்மின்)

கற்பிட்டி பிரதேசசபைக்குட்பட்ட நகரங்கள் தொடக்கம் கற்பிட்டி வரையான பிரதான வீதியை புனரமைத்துக் கொடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நுரைச்சோலையில் அனல் மின்சாரம் நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்தபோது, முதலில் பாலாவி தொடக்கம் கற்பிட்டி வரையான வீதியை நவீனமுறையில் காபட் பாதையாக புனரமைத்துக் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அனல் மின்சாரம் அமைக்கப்படும்போது பாலாவி தொடக்கம் நகரங்கள் வரையான வீதியே காபட் வீதியாக அரசாங்கத்தால் புனரமைக்கப்பட்டபோதிலும் ஏனையப் பகுதி புனரமைக்கப்படாதுள்ளது.

இதனால் இவ்வீதியூடாகப் பயணம் செய்யும் தாம் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வீதி குன்றும் குழியுமாக காட்சியளிப்பதால் அரை மணி நேரத்தில் உரிய இடத்தை அடைவதற்கு இரண்டு மணி நேரம் எடுப்பதாகவும் மக்கள் தெவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .