2021 மே 15, சனிக்கிழமை

வீதியோர வடிகான்களில் குப்பை கூழங்களை கொட்டுதல், வடிகானை மூட தடை

Super User   / 2011 நவம்பர் 20 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் நகர சபைக்குட்பட்ட பிரதேச வீதியோர வடிகான்களில் குப்பை கூழங்களை கொட்டுவது, வடிகானை மூடி கட்டடங்கள் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம் என புத்தளம் வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

வீதியோர வடிகான்களில் குப்பைகளைக் கொட்டுவதில் இருந்து பொது மக்கள் தவிர்ந்து கொள்வதுடன், வடிகான் அமைந்துள்ள வீதியின் மத்திய கோட்டிலிருந்து இரு பக்கமும் 1 5மீற்றர் தூரத்திற்குள் கட்டடங்களை அமைப்பதும் தண்டனைக்குரிய குற்றம் எனகுறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட இந்த அறிவித்தல் பதாதைகள் கொழும்பு - புத்தளம் பிரதான வீதியோரத்தில் பொது மக்களின் பார்வைக்காக காட்சிப்படுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .