2021 ஜூன் 16, புதன்கிழமை

புத்தளத்தில் டெங்குநுளம்பு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டன

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் நகரில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புத்தளம் நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு பொது சுகாதார பரிசோதகர்கள் புத்தளத்தில் மேற்கொண்ட சோதனையின்போது டெங்கு நுளம்பு பரவக்கூடிய வகையில் அதிகமானவர்கள் தங்களது சுற்றுப்புறச் சூழலை வைத்திருக்கின்றனர். தங்களது சுற்றுப்புறச்சூழலை துப்பரவு செய்வதற்கு இவர்களுக்கு நேரமின்மையே காரணம் ஆகும் எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என்னிடம் கூறினார்கள்.

இது மட்டுமன்றி எந்த நேரமும் உழைக்கின்ற ஒருவர் வாரத்தில் ஒருநாள் ஓய்வெடுத்து தமது குடும்பத்தினருடன் அந்த ஒரு நாளை சந்தோஷமாகக் கழிக்க வேண்டும். அதுவே உழைக்கின்றவர்களுக்கு மன ஆறுதலையும் நிம்மதியையும் கொடுக்கிறது. இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டே நாம் ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை தினமாக அனுஷ்டிப்பதற்கு தீர்மானம் செய்துள்ளதாகவும்இது தொடர்பில் அனைத்து தரப்பினருடன் பேசி எதிர்வரும் 31ஆம் திகதி இறுதி முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் புத்தளம் நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .