2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

கெமி சவிய வீட்டுத் தோட்ட செய்கை திட்டத்திற்கு 3100 குடும்பங்கள் தெரிவு

Kogilavani   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)

'கெமி சவிய வீட்டுத் தோட்ட செய்கை' வேலைத்திட்டத்தின் கீழ் முந்தல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சகல கிராம அலுவலர் பிரிவுகளிலும் தலா 100 குடும்பங்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான விதைகள் மற்றும் உரம் என்பன வழங்கப்பட்டு வருகின்றன.

முந்தல் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள 31 கிராம அலுவலர் பிரிவுகளில் 3100 குடும்பங்கள்  இவ்வேலைத் திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் அங்கு கடமையாற்றும் விவசாய உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி அதிகாரிகள் மூலம் ஐம்பது குடும்பங்களும்,  சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் கிராம அதிகாரிகள் மூலம் தலா இருபத்தைந்து குடும்பங்களுமாக 100 குடும்பங்கள்  வீதம் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வொவ்வொரு குடும்பங்களுக்கும் வீட்டுத் தோட்டச் செய்கைக்காக மரக்கரிகள் மற்றும் மிளகாய் விதைகளும்,  உரமும் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .