2021 ஜூன் 14, திங்கட்கிழமை

இரண்டு வீதிகள் புனரமைப்பு

ரஸீன் ரஸ்மின்   / 2017 ஜூன் 14 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட நல்லாந்தளுவ மற்றும் விருதோடை ஆகிய கிராமங்களில், புனரமைக்கப்படாமல் இருந்த இரண்டு வீதிகளின் புனரமைப்புப் பணிகள், நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

 

நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் தலா பத்து இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இந்த இரண்டு வீதிகளும் புனரமைக்கப்படவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் கடையாமோட்டை பிராந்திய அமைப்பாளர்  விடுத்த வேண்டுகோளுக்கிணங்க,  ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி பிரதான அமைப்பாளரின் முயற்சியால் இரு வீதிகளும் புனரமைக்கப்படவுள்ளன.

குறித்த வீதிகளை புனரமைப்புச் செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் எம்.என்.எம்.நஸ்மி உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .