Niroshini / 2016 மே 31 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்
சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூயில் விஞ்ஞான ஆய்வுகூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் எம்ஜே.எம். நஸ்மியின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமேல் மாகாண கல்வி அமைச்சர் சந்தியாகு ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில், வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், முன்னாள் நகர சபை உறுப்பினர் சட்டத்தரணி முஹம்மது அமீன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், முன்னாள் நகர சபை உறுப்பினர் சட்டத்தரணி முஹம்மது அமீன் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க மாகாண கல்வி அமைச்சு குறித்த ஆய்வுகூட நிருமாணப்பணிகளுக்காக 7 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

19 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
50 minute ago
1 hours ago