Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
ரஸீன் ரஸ்மின் / 2017 செப்டெம்பர் 23 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
முந்தல், நவன்டாங்குளம் பகுதியில் உள்ள அரச காணியொன்று தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், முந்தல் பிரதேச கிராம நிர்வாக அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாக ௯றப்படும் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் முந்தல் பொலிஸார், நேற்று (22) கைது செய்தனர்.
முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நவன்டான்குளம் பகுதியில் உள்ள அரச காணியை பார்வையிடுவதற்காக பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர், நேற்று (22) நண்பகல் குறித்த பகுதிக்கு விஜயம் செந்துள்ளனர்.
இதன்போது, குறித்த அரச காணி தொடர்பில் முந்தல் பிரதேச கிராம நிர்வாக அதிகாரிக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இதன்போது, மக்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், முந்தல் பிரதேச கிராம நிர்வாக அதிகாரி மீது ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த முந்தல் பிரதேச கிராம நிர்வாக அதிகாரி, முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கல்பட்டுள்ளார்.
இதையடுத்து, குறித்த கிராம நிர்வாக அதிகாரி மீது தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் பிரதேசவாசி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (23) நீதிவான் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தல் நவன்டான்குளம் பகுதியில் வசிக்கும் காணியற்ற சுமார் 50 குடும்பங்களுக்கு அந்தக் காணியை பிரித்து வழங்குமாறு, மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், குறித்த காணி சதுப்பு நிலம் என்பதால் அதில் மக்கள் வசிக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
39 minute ago
56 minute ago
1 hours ago