Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
George / 2017 ஜூன் 13 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-திலிப் ஜயகொடி
தென் அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள், மண் பற்றாக்குறை காரணமாக தடைப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அராசாங்கம் மாறியதால், பல்வேறு பிரச்சினைக்கு முகங்கொடுத்த நிலையில், மீண்டும் வழமை நிலைக்கு திரும்பிய கட்டுமானப் பணிகள், தேவையான அளவு மண் கிடைக்காமை காரணமாக மீண்டும் தடைப்பட்டுள்ளதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மண் அகழப்படுதல் தொடர்பில், அரசாங்கத்தால் பல்வேறு சட்டங்கள், நியதிகள் கொண்டுவரப்பட்டமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியராச்சியிடம் கேட்போது, “ மண் கிடைக்காமை காரணமாக கட்டுமானப்பணிகளில் சற்று தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலை வீதி கட்டுமானப் பணிகளில் மாத்திரமின்றி, ஏனைய கட்டுமானப்பணிகளிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
“எதிர்வரும் சில நாட்களுக்குள் இந்த மண் பிரச்சினைக்கு தீர்வுக் காண முடியும். இது தொடர்பில், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் அவதானம் செலுத்தியுள்ளனர்” என்றார்.
“அரசாங்கம் சட்டங்களை கொண்டுவருவது கெட்டதுக்கு இல்லை. இந்த மண் பிரச்சினைக்கு காரணம், சில டிப்பர் மண் மாத்திரம் அகழ்வதாக அனுமதிப் பத்திரம் பெற்று, பாரியளவில் மணல் அகழ்வில் ஈடுபட்டு காடுகளை நாசமாக்கியுள்ளதுடன், சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையாகும்.
“அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி என்பதால் காடுகளை அழிக்க சந்தர்ப்பம் வழங்க முடியாது. எனவே, சட்ட ரீதியில் மண் அகழ அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், தேவையான அளவு மண் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
“மண் அகழ்வுகளை மேற்கொள்ள தேவையான விடயங்களை உள்ளடக்கி புதிய முறையொன்றை நாங்கள் உருவாக்கியுள்ளோம்” என்றார். மண் பாவித்து செய்யப்படும் வேலைகள் தவிர்ந்த ஏனைய பணிகளை முன்னெடுக்குமாறு, கட்டுமானப் பிரிவினருக்கு அறிவித்துள்ளோம். எனவே, எதிர்பார்க்கப்பட்ட காலத்துக்குள் கட்டுமானப் பணிகளை பூர்த்திச் செய்ய முடியும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
37 minute ago
52 minute ago