Editorial / 2017 ஜூலை 11 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசமைப்பு தொடர்பான உத்தேச வரைபு கூட இதுவரை தயாரிக்கப்படவில்லை. அவ்வாறு தயாரிக்கப்படுமானால், அதனை நாடாளுமன்றத்துக்கும் நாட்டுக்கும் முன்வைத்து, அனைத்து முன்மொழிவுகள் மற்றும் குற்றச்சாட்டுக்களையும் கருத்திலெடுத்து, திருத்தங்களுடனேயே அந்த உத்தேச வரைபைத் தயாரிக்க எதிர்ப்பார்ப்பதாக, ஜனாதிபதி தெரிவித்தார்.
தெஹியத்தகண்டிய மகாவலி சாலிக்கா மண்டபத்தில், திங்கட்கிழமை (10) நடைபெற்ற வண. மக்குருப்பே பஞ்ஞாசேகர தேரருக்கான நியமனப் பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களுக்கு இருக்கும் அக்கறை, தற்போதுள்ள தேர்தல் முறையை மாற்றி, தொகுதிவாரி தேர்தல் தொடர்பான கோரிக்கை ஆகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் அதிகாரப் பகிர்விலும் ஒருபோதும் பிரிக்கப்படாத ஒன்றுபட்ட நாடான முறையில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பில் அரசமைப்பில் உள்ள விடயங்களில் எந்தவொரு மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாதென்பதுடன், 1972 அரசமைப்பபில் பௌத்த சமயம் தொடர்பில் இருக்கும் பந்தியிலும் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வண. ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரால் நியமனப்பத்திரம் வழங்கப்பட்டதுடன், ஜனாதிபதியினால் தேரருக்கான விசிறியும் வழங்கப்பட்டது.
வண.மெதகம தம்மாநந்த தேரர், வண. உருலேவத்தே தம்மரக்கித, வண. கொடகம மங்கல தேரர் உள்ளிட்ட தேரர்களும் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, தயா கமகே, பிரதியமைச்சர் அனோமா கமகே, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
19 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago