2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2018 மார்ச் 23 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

சிலாபம் தெதுறு ஓயா ஆற்றிலிருந்து, ஆணொருவரின் சடலத்தை, நேற்று இரவு, தெதுரு ஓயா பொலிஸார் மீட்டுள்ளனர்.

பள்ளம எலிவிட்டிய  பிரதேசத்தைச் சேர்ந்த எல்.எம்.பியதாச (வயது 62)  எனும் நான்கு பிள்ளைகளின் தந்தையின் சடலமே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

தெதுறு ஓயா கரையில் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளதையடுத்து, இதனை அறிந்து கொண்ட  கிராம அதிகாரி, அது தொடர்பில் சிலாபம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார். 

இதனையடுத்தே சிலாபம் பொலிஸார் குறித்த இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X