Editorial / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் நகரிலுள்ள சீன உணவகம் ஒன்றுக்கு ஆமைகளை விற்பனை செய்து வந்த சந்தேக நபர்கள் இருவரை நேற்று (02) பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஏழு ஆமைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
முச்சக்கர வண்டியில் சட்டவிரோதமான முறையில் ஆமைகளைக் கடத்திச் செல்வதாகப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து விசேட தேடுதல் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். இதன்போது முச்சக்கர வண்டியை சோதனையிட்ட பொலிஸார் ஆமைகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இவர்கள் நீண்ட காலமாக சீன உணவகத்துக்கு அதிகூடிய விலைக்கு ஆமைகளை விற்பனை செய்து வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. புத்தளம் பகுதியில் மீனவத் தொழிலில் ஈடுபட்டு வரும் சந்தேக நபர்கள், இரவு வேளைகளில் இரகசியமான முறையில் ஆமைகளைக் கடத்தி விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்தக் கடத்தல் சம்பவத்துடன் மேலும் பலர் தொடர்புபட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
8 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Oct 2025