Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Niroshini / 2016 ஜூன் 02 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு குடாபாடு பிரதேசத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் பெண் ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிரான்ஸ் பிரஜை ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 35 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடாக செலுத்த இணக்கம் தெரிவித்ததை அடுத்து, விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.
ஸ்டுபான் குங்கே என்ற பிரான்ஸ் பிரஜையே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரான்ஸ் பிரஜை அவரது மனைவியுடன் குடாபாடு பிரதேசத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (30) அன்று பகல் வேளையில் அந்த தம்பதியினர் ஹோட்டலைவிட்டு வெளியேறும் போது, தமது அறையின் கதவில் தமது அறையை சுத்தப்படுத்துமாறு அறிவித்தல் ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
அந்த ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஒருவர் அந்த வெளிநாட்டு தம்பதிகளின் அறைக்கு பக்கத்தில் உள்ள அறையை சுத்தப்படுத்திவிட்டு வெளியே வரும்போது, அந்த பிரான்ஸ் 'பிரஜை எனது பணம் எங்கே? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த ஊழியரான பெண் பணம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து அந்த பணிப்பெண்ணின் ஆடையை கழற்றுமாறு வெளிநாட்டவர் கூறியுள்ளதுடன், ஹோட்டல் சீருடையில் இருந்த அந்த பெண்ணின் ஆடையை பற்றிப் பிடித்து மேல் மாடியிலிருந்து கீழே இழுத்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டு திங்கட்கிழமை நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்தை முன்னிலையில் ஆஜர் செய்யப்பப்டார்.
இதன்போது, நீதவான் சந்தேக நபரை நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (31) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில் அந்த வெளிநாட்டவர் அன்றைய (31- செவ்வாய்க்கிழமை) தினம் தனது நாட்டுக்கு திரும்பிச் செல்லவிருந்தார்.
செவ்வாய்க்கிழமை மீண்டும் சந்தேக நபர் மன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, வெளிநாட்டவரின் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இருதரப்பினரும் இந்த விடயம் தொடர்பில் சமாதானத்துக்கு வர இணக்கம் தெரிவிப்பதாக அறிவித்ததையடுத்து, பாதிக்கப்பட்ட ஹோட்டல் பணிப் பெண்ணுக்கு 35 ஆயிரம் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
48 minute ago
52 minute ago
55 minute ago