2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கடலாமையை இறைச்சியாக்கிய இரு மீனவர்கள் கைது

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூன் 14 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடலாமையொன்றை அறுத்து இறைச்சியாக்கிக் கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள் இருவரை, சிலாபம் பொலிஸார் கைதுசெய்த சம்பவமொன்று, இன்று இடம்பெற்றுள்ளது.

சிலாபம், வேல்ல கடற்றொழில் கிராமத்தில் வைத்தே, மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விருவரும், கடலாமையொன்றை இறைச்சியாக்கிக்கொண்டிருப்பதாக, பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார், 35 கிலோகிராம் நிறையுடைய ஆமை இறைச்சியுடன், சந்தேகநபர்கள் இருவரையும் கைதுசெய்தனர்.

ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, தங்களது வலையில் இந்த ஆமை சிக்கியுள்ளதாகவும் அது வலையில் சிக்கும் போதே இறந்த நிலையில் காணப்பட்டதாகவும், பொலிஸாரிடம் சந்தேகநபர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரையும், சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் பொலிஸ் நிலைய தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் வசந்த ஹேரத்தின் ஆலோசனையில், மோசடி ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமன்சிறி தலைமையிலான குழுவினர், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X