Editorial / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரான் பிரியங்கர
மஹாவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, குடாவெவ- வெல்யாய பகுதியை ஊடறுத்துப் பாயும் கடுபிட்டி ஓயா ஆற்றின் ஒரு பகுதி, உடைப்பெடுக்கும் அபாயம் காணப்படுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி ஆற்றின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டே, இவ்வாறு உடைப்பெடுக்கும் அபாய நிலையில் காணப்படுவதாகவும், இதனைப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படாமையால், பாரிய அனர்த்தம் ஏற்படக்கூடும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடுபிட்டி ஓயா ஆற்று நீரைப் பயன்படுத்தி, 220 ஏக்கரில் விவசாய செய்கை மேற்கொள்ளப்படுவதுடன், அணைக்கட்டு உடைப்பெடுத்தால், அங்குள்ள வயல் காணிகள் வௌ்ளத்தில் மூழ்கி அழிவடையக்கூடுமென, விவசாயிகள் கவலை வெ ளியிட்டுள்ளனர்.
36 minute ago
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
3 hours ago
5 hours ago
6 hours ago