Editorial / 2026 மார்ச் 10 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்
யாழ்ப்பாணம், சரவணை பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் சிலையினைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: சரவணை, செல்லக்கதிர்காமம் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த உருவச்சிலை ஒன்று திங்கட்கிழமை (09) அன்று மர்ம நபர்களினால் உடைத்துச் சேதப்படுத்தப்பட்டது. இது குறித்து ஆலய நிர்வாகத்தினரால் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த ஊர்காவற்துறை பொலிஸார், ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், குறித்த பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், அவரை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
41 minute ago
1 hours ago