2025 மே 02, வெள்ளிக்கிழமை

கடும் காற்றையடுத்து 104 வீடுகளுக்குச் சேதம்

Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரன் பிரியங்கர

முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (05) வீசிய கடும் காற்று காரணமாக, 104 வீடுகளுக்குச் சேதம் எற்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலாளர் சந்திரசிறி பண்டார தெரிவித்தார்.

'பலத்த மழையுடன் வீசிய கடும் காற்றையடுத்து, ஆனமடுவ, மஹகும்புக்கடவல, நவத்தேகம பகுதிகளிலுள்ள மரங்கள் வீடுகளின் மீது முறிந்து விழுந்துள்ளதால், பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. 

மஹகும்புக்கடவல பகுதியிலுள்ள வீடுகளுக்கே இதனால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சுமார் 50 வீடுகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 142 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை, நவத்தேகம பிரதேச செயலகப் பிரிவில் 26 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 36 குடும்பங்களைச் சேர்ந்த 101 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆனமடுவ பகுதியில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 109 பேரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் நட்டஈடு வழங்க, அனர்த்த முகாமைத்துவப் பிரிவு முதற்கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .