Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
கொரொனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், பாலாவி - கற்பிட்டி வீதியில் பயணிக்கின்ற அனைத்து வாகனங்களுக்கும் கொரோனா தொற்று நீக்கி தெளிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொலிஸாரின் ஒத்துழைப்பில் கற்பிட்டி பிரதேச சபை இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியின் கரம்பை பகுதியில் கற்பிட்டி பகுதியை நோக்கி உள்நுழையும் அனைத்து வாகனங்களுக்கும், இவ்வாறு கொரோனா தொற்று நீக்கி மருந்து விசிறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுகின்றன.
கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக பாதுகாப்பைபெற முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு, பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியூடாக பயணிக்கும் அனைத்து வாகன சாரதிகளும், பயணிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு, கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் ஏ.எம்.இன்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago