Editorial / 2020 ஏப்ரல் 04 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம். சனூன்
கற்பிட்டி பகுதி விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா பிரதேச செயலாளருடன் விசேட பேச்சுவார்த்தையொன்றினை மேற்கொண்டுள்ளார்.
பிராந்திய விவசாயிகள் சிலர் நேற்று (03) முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியாவை தொடர்புக்கொண்டு, விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க உரம் தேவைப்படுவதாகவும் உரங்களை விநியோகிக்கும் கடைகள் மூடப்பட்டுள்ளதால், உரத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, அவர் கற்;பிட்டி பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு உரையாடினார்.
நுரைச்சோலை மத்தியில் அமைந்துள்ள விவசாயிகள் உரங்களை பெற்றுக்கொள்வதற்காக, உரக்கடைகளை திறக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, குறைந்தது நுரைச்சோலை சந்தையிலுள்ள உரக்கடையையாவது திறக்க நடவடிக்கையெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியாவின் கோரிக்கையின் நியாயத்தை ஏற்ற கற்பிட்டி பிரதேச செயலாளர், உடனடியாக உயர் மட்டங்களுடன் பேசி இதற்கான தீர்வினை பெற்றுத்தர உதவுவதாக வாக்குறுதியளிததுள்ளார்.
1 hours ago
5 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
24 Oct 2025