Editorial / 2017 ஜூலை 05 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம் நகர சபை, சிலாபம் பிரதேச சபை மற்றும் ஆரச்சிகட்டுவ பிரதேச சபை ஆகியவற்றின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற ஒன்றிணைந்த திண்மக் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்காக காணித்துண்டொன்றை விடுவித்துக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த ஒன்றிணைந்த திண்மக் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்காக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸல் முஸ்தபாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு உரித்தான, ஆரச்சிகட்டுவ பிரதேச சபைக்கு உட்பட்ட, கருக்குழிய கிராம சேவகர் பிரிவிலுள்ள மானாவேரிய தோட்டம் எனும் இடத்திலுள்ள 5 ஏக்கர் காணித்துண்டொன்றை 30 வருட குத்தகையின் அடிப்படையில், சிலாபம் நகர சபைக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
17 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago