Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.யூ.எம். சனூன் / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், சிறாம்பியடி, மாணாவேரி பிரதேசத்தில் மிக நீண்ட காலம் கவனிப்பாரற்று கிடந்த பாதை, குறுகிய காலத்துக்குள் காபட் வீதியாக மாற்றப்பட்டுள்ளது.
இதனை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் (02) இடம்பெற்றது.
நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் முயற்சியின் பலனாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாதையை, இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.
பாதையை காபட் வீதியாக மாற்றியமைத்தது மாத்திரமின்றி, அந்தப் பாதை மார்க்கத்துக்கான பஸ் சேவையொன்றையும் இராஜாங்க அமைச்சர் ஆரம்பித்துவைத்தார்.
புத்தளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அநுர குணவர்தன உள்ளிட்ட பிரதேச பொதுமக்கள் பலரும் இந்நிழ்வில் கலந்துகொண்டனர்.
14 minute ago
27 minute ago
38 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
38 minute ago
54 minute ago